இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்

மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தாக்கியதில் மொத்தம் 16 ஆயிரத்து 510 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உலகளவில் அதிகபட்சமாக இத்தாலியில் 6 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து என்றும் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடக்கு மாகாண சுகாதார மையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்கள் இது குறித்து பேசினர்.

அப்போது உலக அளவில் கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இலங்கையிலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று பரவும் வீதம் தொடர்பான வரைபடமும் உலகின் மற்ற நாடுகளில் பரவும் வீதம் தொடர்பான வரைபடமும் ஒத்துப் போகின்றது.

இது அப்படியே தொடருமானால் இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கையில் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காவார்கள். அவ்வாறு நடக்கக் கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து ஏற்படும்” என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close