சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது

சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது

சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்றும், இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் 2015-ம் ஆண்டு அப்போது இருந்த அரசு சிறுபான்மையினரான தமிழர்களுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன், தமிழில் பாடுவதையும் இணைக்க நடவடிக்கை எடுத்தது.

அதன்படி 2016-ம் ஆண்டு முதல் அங்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.

சிங்கள தேசிய கீதத்தின் நேரடி மொழிபெயர்ப்பே தமிழ் தேசிய கீதம். சிங்களத்தில் ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும், தமிழில் ‘ஸ்ரீலங்கா தாயே’ என்று தொடங்கும்.

சுதந்திர தினவிழாவில்

தமிழ் தேசிய கீதம் சேர்க்கப்பட்டபோது தமிழ் சமுதாயத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என வழக்கு தொடுத்தது.

கடந்த வாரம் உள்துறை மந்திரி மஹிந்த சமரசிங்கே கூறும்போது, “சுதந்திர தின முக்கிய விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், மாகாணங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ் பாடலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் 2016-ம் ஆண்டில் இருந்து இப்போது முதல் முறையாக, சுதந்திர தின விழாவில் தமிழ் தேசிய கீதம் இல்லை, சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரி நேற்று அறிவித்தார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை!

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு! பௌத்த மதத்துக்கே முதலிடம்!!

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …