Wednesday , January 16 2019
Home / இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Sri lanka News

வாழைச்சேனையில் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களாலேயே, மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து மேற்படி சிறுவன் காட்டுமிராண்டித்தனமாக அடித்தும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலைசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனைத் தாக்கிய இரு இளைஞர்களும், அவரை …

Read More »

சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா? – ராஜித நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவும் அண்மையில் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தினர் எனத் தகவல் வெளியாகியிருந்தது. கொழும்பில் இன்று ( 16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது குறித்து அமைச்சர் ராஜிதவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், …

Read More »

சிறையில் கைதிகள் மீது கொடூர சித்திரவதை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமான தகல்கள் வௌியாகியுள்ளன. சிறைக் கைதிகளின் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பால் இது சம்பந்தமான சி.சி.ரி.வி. காட்சிகள் சில இன்று வௌியிடப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வௌியிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சிறைக்கைதிகள் முகங்கொடுத்த சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் குறித்த அமைப்பால் இன்று தகவல் வௌியிடப்பட்டுள்ளது. Share1TweetSharePin+11 Shares

Read More »

விக்னேஸ்வரனையும் சந்தித்தார் ராகவன்!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (16) சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என்று ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. Share1TweetSharePin+11 Shares

Read More »

மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்றும் பிற்பகல் மற்றும் இன்று காலை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மன் கோயில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர், வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே விமல தேரரையும், நயினாதீவு விஹராதிபதி வண. நமதகல பத்மகித்தி …

Read More »

வடக்கு – கிழக்கு வீடமைப்புக்கு அடிக்கல் நடுகை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய கல் வீட்டுத் திட்டத்தில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல், தைப் பொங்கல் – தை முதல் நாளான நேற்று நடப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா அடிக்கல்லை நட்டு ஆரம்பித்து வைத்தார். வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தென்மயிலை, மயிலிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அமைக்கும் …

Read More »

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் நேற்று சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலைப் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ShareTweetSharePin+10 …

Read More »

வந்தாறுமூலையில் கணவர் சடலமாக மீட்பு! மனைவி கைது!!

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் வீடொன்றிலிருந்து கணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி கைதுசெய்யப்பட்டுளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்மித்துள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது – 35) என்பவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. Share5TweetSharePin+15 Shares

Read More »

இராணுவத்தினரை எந்தவொரு நீதிமன்றிலும் அரசு நிறுத்தாது!

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “நாங்கள் எப்போதும் பௌத்தத்தை மதிக்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்ததவொரு நல்ல பௌத்தருமோ அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை. நாட்டில் நிலவிய மோசமான போரை, தமது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி முடிவுக்கு கொண்டு வந்து நாட்டைப் பாதுகாத்த போர் …

Read More »

வவுனியாவில் குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் மரணம்!

வவுனியா – இரட்டைப் பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கலையொட்டி இன்று (15) பகல் 6 இளைஞர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளித்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறியபோது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 இற்கும் 20 வயதிற்கும் உட்பட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த …

Read More »