Wednesday , October 17 2018
Home / Headlines News / கிளி­நொச்சி மாவட்­டத்துக்­கு – தீய­ணைப்பு பிரிவு!!
கிளி­நொச்சி

கிளி­நொச்சி மாவட்­டத்துக்­கு – தீய­ணைப்பு பிரிவு!!

மீள்­கு­டி­யேற்­றம் மறு­வாழ்வு அமைச்­சின் 97 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீட்­டில் கிளி­நொச்­சிக்­கான தீய­ணைப்பு பிரிவு நேற்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

நேற்று மாலை 3.50 மணி­ய­ள­வில் கிளி­நொச்சி கர­டிப்­போக்­குச் சந்­திக்­க­ருக்­கில் அமைக்­கப்­பட்ட மாவட்ட தீய­ணைப்பு பிரி­வின் அலு­வ­ல­க­மும், தீய­ணைப்­புக்­கு­ரிய வாக­னங்­கள் உள்­ளிட்ட கரு­வி­க­ளும் கரைச்சி பிர­தேச சபை­யி­டம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­பட்­டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் கிளி­நொச்சி பொதுச் சந்­தை­யில் ஏற்­பட்ட பாரிய தீ கார­ண­மாக சந்­த­தை­யின் பெரும் பகுதி தீயி­னால் எரிந்து பல இலட்­சங்­கள் பெறு­ம­தி­யான சொத்­துக்­கள் அழி­வ­டைந்­தி­ருந்­தன.

இதனை தொடர்ந்து கிளி­நொச்சி மாவட்­டத்­திற்­கான தீய­ணைப்பு பிரிவு ஒன்­றின் தேவை குறித்து பல தரப்­பி­னர்­கள் மத்­தி­யில் கோரிக்­கை­கள் எழுந்­தன.

இதற்­க­மை­வாக மீள்­கு­டி­யேற்­றம் மறு­வாழ்வு அமைச்­சர் டி.எம் சுவா­மி­நா­த­னால் 97 மில்­லி­யன் ரூபா நிதி ,அமைச்­சின் ஊடாக ஒதுக்­கப்­பட்டு பணி­கள் பூர்த்தி செய்­யப்­பட்டு நேற்­று உத்­தி­யோ க பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிகழ்­வில் மீள்­கு­டி­யேற்­றம் மறு­வா­ழ்வு அமைச்­சர் டி.எம் சுவா­ மி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன், மாவட்ட அரச அதி­பர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம், மீள்­கு­டி­ யேற்­றம் மறு­வாழ்வு அமைச்­சின் செய­லர் சுரேஸ், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான குரு­கு­ல­ராஜா, பசு­ப­தி­பிள்ளை, தவ­நா­தன், கரைச்சி பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் சபை­யின் உறுப்­பி­னர்­கள், எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

குறித்த நிகழ்வு மூன்று மணிக்கு இடம்­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிலை­யில் அதி­கா­ரி­கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள், பிர­தே­ச­சபை தவி­சா­ளர், உறுப்­பி­னர்­கள் ,பொலி­ஸார் ,மக்­கள் என பல­ரும் குறித்த நேரத்­திற்கு வரு­கை­தந்த நிலை­யி­லும் மீள்­கு­டி­யேற்­றம் மறு­வாழ்வு அமைச்­சர் டி.எம் சுவா­மி­நா­தன் குறித்த நேரத்­திற்கு வரு­கை­த­ரா­த­தால் நீண்­ ட­நே­ரக் காத்­தி­ருப்­புக்கு பின்­னர் 3.50 மணி­ய­ள­வி­லேயே நிகழ்வு ஆரம்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது .

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –17 அக்டோபர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 17-10-2018, புரட்டாசி 31, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திராடம் …