Friday , January 18 2019
Home / இலங்கை செய்திகள் (page 10)

இலங்கை செய்திகள்

Sri lanka News

118 கிலோ கஞ்சாப் பொதி வல்வெட்டித்துறையில் சிக்கியது!

118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்றை வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து கடற்படையினர் மீட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அந்தப் பொதியை அந்தப் பகுதிக்கு எடுத்து வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை எனப் பொலிஸார் கூறினர். கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய அந்தப்பகுதிக்கு நேற்றுச் சென்ற கடற்படையினர் கஞ்சாப் பொதியை மீட்டனர். மீட்கப்பட்ட கஞ்சாவைக் கடற்படையினர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை …

Read More »

கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழுக் கூட்டம் இன்று காலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பையும் சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது. Share4TweetSharePin+14 …

Read More »

சபாநாயகரைப் பாராட்டுகிறார் கிழக்கு முன்னாள் முதல்வர்!

“மாகாண சபைத் தேர்தலைகளை பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கடந்த வெள்ளியன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க அம்சமாகும். ஜனநாயகத்தின் காவலர் என்பதை சபாநாயகர் நிரூபித்துள்ளார்.” – இப்படித் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “மாகாண சபைத் …

Read More »

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (08)  பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. இதன்போது நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அவைக்கு அறிவிப்பார். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப்பிரமாணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காக ஹில்புல்லாஹ், எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தார். …

Read More »

வடக்கு, சப்ரகமுவ, ஊவாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

வடக்கு, சப்ரகமுவ, ஊவா ஆகிய மூன்று மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை, தென் மாகாணத்துக்கு ஆளுநராக இதுவரையில் …

Read More »

யாழில் மகளிர் அமைப்புக்களுடன் ஒஸ்லோ பிரதி மேயர்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணம் யாழ்ப்பாணத்தில் நேற்று மகளிர் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டன. இலங்கை கொள்கைகளுக்கான பேரவையின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. இதில் வடக்கு …

Read More »

தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம்!

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும்.” – இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு நிறைவேறாது என்று மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை …

Read More »

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளைக் கொலைசெய்த தாய்!

9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்தனர் எனச் சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகில் மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார் எனக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் எனத் …

Read More »

கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் தீர்வு கிடைக்கும்!

“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று சொல்ல முடியாது. இதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவசரப்படாமல் பொறுமையாக இருந்தால் மூவின மக்களும் ஏற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாமே முன்வந்து வழங்குவோம்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘பிரிக்கப்படாத நாட்டுக்குள் …

Read More »

புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம்!

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதிச் சந்தர்ப்பத்தை நாம் தக்க முறையில் – அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம். புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.” – இவ்வாறு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பிளவுபடாத நாட்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் தவறவிடக் கூடாது என்று தமிழ்த் …

Read More »