Friday , January 18 2019
Home / இலங்கை செய்திகள் (page 20)

இலங்கை செய்திகள்

Sri lanka News

தீர்ப்பும் பாதகமெனில் பதவி விலக மஹிந்த அணி முடிவு

மஹிந்த ராஜபக்

பிரதமராக கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நியமிக்கப்பட்ட, மஹிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தெரியவருகின்றது. நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில், மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்தக் கூட்டத்தில், கருத்து வெளியிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள், அரசில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் …

Read More »

ரணிலுடன் ஒப்பந்தம் என்று வெளியான ஆவணம் பொய்

இரா. சம்பந்தன்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் ஒப்பந்தம் செய்துள்ளேன் எனக் கூறி வெளியாகியுள்ள ஆவணம் பொய்யானது. நான் ரணிலுடன் ஒப்பந்தம் எதிலுமே கைச்சாத்திடவில்லை.”  இவ்வாறு அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறி முற்றுமுழுதாகச் சிங்களத்தில் அமைந்த ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் …

Read More »

மன்னார் மனித புதைகுழிக்கு ஐ.நா. பாதுகாப்பு தரவேண்டும்

மன்னார்

கடந்த 30 வருடங்களாக நிகழ்ந்த போர் மற்றும் போருக்குப் பின்னரான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் இன்று வரையில் அவர்களைப் பற்றி எது வித தகவலும் இல்லை என வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மனிதப் புதை குழிகளில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா. பொறுப்பேற்க கோரி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் …

Read More »

முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் மரக்கறி வியாபாரம்

முட்கொம்பன்

முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் மரக்கறி வியாபாரம்: பாதிக்கப்பட்டுள்ள சந்தை வியாபாரிகள்! பூநகரி முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் உள்ள வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்குள் மூன்று மரக்கறி வியாபாரிகள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களின் இருவர் அன்மையில் தங்களது வியாபாரத்தை நிறுத்தியுள்ள நிலையில் ஒருவர் மாத்திரம் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இவரும் தொடர்ந்தும் வியாபாரத்தை கொண்டு செல்ல …

Read More »

மன்னார் மனித புதைகுழி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது:அனந்தி

அனந்தி சசிதரன்

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்யினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது. மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளதாக முன்னாள் வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து அவர் நேற்று …

Read More »

போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் அவசியம்

போர்க்குற்றங்கள்

இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படல் உள்ளிட்ட விடயங்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளாக முன்வைத்தது. கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடனும், 30ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுடனும் கூட்டமைப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்தச் சந்திப்புக்களில் போர்க்குற்ற விசாரணை பற்றி கூட்டமைப்பு எதையும் பேசவில்லை என்று செய்தி வெளியாகியிருந்தது. இது …

Read More »

புதிய அரசமைப்பு வரும்! தமிழருக்குத் தீர்வு உறுதி!!

ரணில் விக்கிரமசிங்க,

“புதிய அரசமைப்பை நாம் கொண்டு வந்தே தீருவோம். அதனூடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.” இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்று வாக்குறுதியளித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் ரணில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் …

Read More »

கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி

மன்னார் மனித புதைகுழி

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று பகல் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் …

Read More »

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி

சஜித்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »