Friday , January 18 2019
Home / இலங்கை செய்திகள் (page 30)

இலங்கை செய்திகள்

Sri lanka News

வெளியானது வர்த்தமானி- ஐனவரி ஐந்து தேர்தல்

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த ஜனாதிபதியின் பிரகடனம் அடங்கிய விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகியுள்ளது இலங்கையின் அரசமைப்பினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது ஜனாதிபதி தெரிவித்துள்ளார் 2019 ஜனவரி ஐந்தாம் திகதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறும் இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நவம்பர் 19 ம் திகதியில் ஆரம்பமாகி 26 ம் திகதி வரை நடைபெறும் …

Read More »

கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அணிதிரளுங்கள்

கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணி திரளவேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பெரும்பான்மையில்லாததால் நம்பிக்கையிழந்த நிலையில் உள்ள ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை சட்டத்தின் ஆட்சியை ஒழுக்கத்தை போற்றி பேணுபவர்கள் அனைவரும் உருவாகிவரும் கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அணி திரளவேண்டும் எனவும் அவர் …

Read More »

உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே தேர்தல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கோரவுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே அவர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவேளை சிறிசேன அரசமைப்பின் 19 வது திருத்தத்தினை மீறி நடந்துள்ளார் என்ற கருத்துக்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் …

Read More »

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் -கோத்தபாய

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சற்று முன்னர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை குறித்த செய்தி வெளியாகிக்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் ஸ்திரதன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்கவேண்டும் …

Read More »

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்?

லங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.வரும் 14 ஆம் …

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை 9.30 மணியிலிருந்து மதியம் வரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புத் …

Read More »

மைத்திரியுடன் முட்டி மோத தயாரானார் சபாநாயகர் கரு!

“நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே சபையில் ஜனாதிபதியால் புதிய கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட வேண்டும். இதை மீறிய செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமானவையாகும். அவை நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அவமரியாதையை ஏற்படுத்தும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றக் குழு அறையில் நேற்றுப் …

Read More »

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கருத்து கூறியிருக்கிறார். இலங்கையில் உள்ள மக்கள் அன்றாடம் உணவும்,உடையும் கல்வியும் வேண்டி நிற்கிறார்கள் அப்படியிருக்க பாராளூமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை மக்களிடமிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது எதிர்பார்க்க முடியாது ஒன்று என முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது: தமிழர்கள் தம்ங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அவர்களின் உரிமை!ஆனால் ஆனால் எங்கள் நாட்டில் …

Read More »

ஆட்சி மாற்றம் தவறானது! எதிரணியில் அமர்வேன்!!

புதிய அரசில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த அணி உறுப்பினரான குமார வெல்கம எம்.பி. அறிவித்துள்ளார். அத்துடன், எதிரணியில் அமர்ந்து சுயாதீன எம்.பியாக செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்து கருத்து வெளியிடுகையிட்ட அவர் மேலும் கூறியதாவது:- “அரசமைப்பின் பிரகாரம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதுவே சிறந்த வழியாக இருந்திருக்கும். தனக்குப் பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்பதால்தான் மஹிந்த இவ்விவகாரத்தில் இறங்கினார். …

Read More »

வேண்டாம் நீங்கள் தந்த தேசமான்ய விருது

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். 1959 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை சிவில் சேவையில் பல்வேறு உயர்பதவி நிலைகளில் …

Read More »