Friday , January 18 2019
Home / இலங்கை செய்திகள் (page 40)

இலங்கை செய்திகள்

Sri lanka News

சபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிராக முடிவு

பாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்திருந்தார். எனினும் திங்கட் கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். …

Read More »

சதுரங்க ஆட்டம் ஆரம்பம்! நானே பிரதமர்!

அரசமைப்பின் பிரகாரம் நானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்கதவால் வந்து ஜனாதிபதி முன்னிலையில் இன்றிரவு பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தத் திருட்டுத்தனத்துக்கு சட்ட வரம்புகளுக்கமைய நான் முடிவு கட்டுவேன்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார் அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றமை …

Read More »

கொழும்பில் வெடித்தது வன்முறை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து சற்று நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். அதற்கமைய அரச ஊடக நிறுவனங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். பல்வேறு பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன தொலைக்காட்சி செய்தி சேவை பிரிவுக்கு சென்ற குண்டர்கள் அங்குள்ள ஊழியர்கள் சிலரை வெளியே விரட்டியுள்ளதாக தகவல் …

Read More »

முடங்கியது அரச தொலைக்காட்சி சேவை

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி சேவை நாடளாவிய ரீதியில் முடங்கியுள்ளது நாட்டின் அரசியலில் இன்று ஏற்பட்ட பிரதமர் மாற்றத்தையடுத்து குறித்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல விஜயம் மேற்கொண்டதையடுத்து கலவரம் அமைதி நிலைக்கு சென்றுள்ளது. ShareTweetSharePin+10 Shares

Read More »

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன்

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தமக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார். இன்று இரவு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை பிரதமர் ரணிலுக்கு அறிவித்துள்ளார். ShareTweetSharePin+10 …

Read More »

மைத்திரியின் அடுத்த அதிரடி உத்தரவு

அனைத்து அரச ஸ்தாபனங்களிற்கும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை தொடர்ந்து உருவாகியுள்ள குழப்பநிலைக்கு மத்தியில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Share7TweetSharePin+17 Shares

Read More »

ஆறு வயது சிறுவனின் முதுகுத்தோலை உரித்த மாமா!

ஆறு

தனது மாமனாரினால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு- மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். படிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே, அனது மாமனார் வயரினால் தாக்கியுள்ளார். கிரிசுட்டகுளம், கனகராயன்குளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி கினுஜன் (06) என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் மாமனாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினாலேயே மாமனார் வயரினால் …

Read More »

மாட்டு வண்டிலில் கலக்கும் மூதாட்டி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 80 வயதுடைய மூதாட்டியொருவர், கடந்த பதினைந்து வருடங்களாகவே தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு செல்வதற்கு இந்த மாட்டு வண்டியையே பயன்படுத்தி வருகிறார். அங்குள்ள ஒருவர் இந்த படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற, இப்பொழுது வைலாக பரவி வருகிறது. ShareTweetSharePin+10 Shares

Read More »

தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

இனி வரும் காலம் ஆபத்தானது என்றும் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது இறுதி உரையில், வேண்டுகோள் விடுத்துள்ளார். சபையின் 5 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் இன்று செய்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாகாண சபையின் இறுதி அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எமது இனத்தை அழிப்பதற்கா அல்லது பாதுகாப்பதற்கா ஒற்றுமை வேண்டும் என்பதை நாம் …

Read More »

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: முதலாளி கைது

சிறுமியை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றின் தரம் 4ம் ஆண்டு கல்விகற்றுவரும் 9 வயது சிறுமி சம்பவதினமான கடந்த 19 ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்ற பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேனீர்கடைக்கு சிற்றுண்டி வாங்கச் …

Read More »