Home / Sri Lanka News / புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் ஒன்று காட்சி கொடுத்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று திங்கட் கிழமை இடம்பெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகதம்பிரானை நோக்கி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இதன்படி நேற்று இரவு நாகதம்பிரானுக்குரிய பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்தினுள் உள்ள தூண் ஒன்றின் மேலிருந்து பக்தர்களை நோக்கி குறித்த நாகம் தலையைத் தொங்கவிட்டுள்ளது. இதனால் ஆலயத்திற்கு வருகை தந்த மக்கள் ஆச்சரியமும் பரவசமும் அடைந்து அந்தப் பாம்பினை நோக்கி அரோஹரா அரோஹரா என ஒலித்தவாறே வழிபட்டனர்.

எவ்வாறாயினும் சில நிமிடங்களே அங்கு காட்சி கொடுத்த வெள்ளை நாகம் பின்னர் அங்கிருந்து மறைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

புலிகளின் ஆயுதங்களைத்தேடி தீவிர வேட்டை!

முல்லைத்தீவில் வெடிபொருட்களுடன் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்குகளைத் தேடும் பணிகள் இன்று அதிகாலை …

error: Content is protected !!