Breaking News
பாராளுமன்ற கன்னி அமர்வில் இடம்பெற்ற முக்கிய தெரிவுகள்

பாராளுமன்ற கன்னி அமர்வில் இடம்பெற்ற முக்கிய தெரிவுகள்

பாராளுமன்ற கன்னி அமர்வில் இடம்பெற்ற முக்கிய தெரிவுகள்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (20.08.2020) காலை 9.30 ஆரம்பமாகியது.

ஆரம்ப நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.

இந்நிலையில் 9 ஆவது பாராளுமன்றின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, 9 ஆவது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இத்துடன் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக தினேஷ் குணவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைய கன்னி அமர்வில் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம், சபாநாயகரின் உரை ஆகியன இடம்பெற்றன.

சபை தலைவராக பொறுப்பேற்ற தினேஷ் குணவர்தன

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க உள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன்

About அருள்

Check Also

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020)

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020)

Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 24, 2020) இன்றைய பஞ்சாங்கம் …