Breaking News
Home / இந்தியா செய்திகள் / தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: இலங்கை அதிபர் கோத்தபய உறுதி
இலங்கை

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: இலங்கை அதிபர் கோத்தபய உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3 நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்த அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதால் கைது செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது.

மேலும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோத்தபய உறுதி அளித்துள்ளார்.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற கோத்தபய ராஜபக்ச-வை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

Check Also

மருத்துவ மாணவி

பாடிபில்டரிடம் மயங்கிய மருத்துவ மாணவி… ரூம் போட்டு பலாத்காரம் செய்ததால் கதறல்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!9Shares திருவனந்தபுரத்தில் திருமண ஆசைக்காட்டி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாடிபில்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் …