இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்றது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இலங்கையில் உள்ள கல்முனை என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையில் உள்ள கல்முனை பகுதியில் நேற்று தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டை ராணுவம் முற்றுகையிட்டது. இந்த சண்டையில் அந்த வீட்டில் இருந்தவர்கள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த வீட்டில் இருந்து ஏராளமான வெடி பொருள்கள், ஜெலட்டின் குட்சிகள், மடிக் கணினிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிறு அன்று நடந்த தேவாலய குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாகச் சிலரின் புகைப்படங்கள், அவர்கள் அணிந்திருந்த கறுப்பு நிற உடைகள் ஆகியவை அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில், தற்போது இலங்கை குண்டுவெடிப்பு கேரளாவைச் சேர்ந்த இருவரிடம் தேசிய முகமை விசாரணை செய்து வருகிறது. சந்தேகம் உறுதியானால் 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags
Show More

Related Articles

Back to top button
Close