தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு

நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஷ்வரன் சென்னை வருகையின் போது, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இலங்கைக்கு வர அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் ரஜினிக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை அரசு கூறியதாக தகவல்கள் பரவின.

இந்த செய்திக்கு இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் ஊடக பேச்சாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என கூறினார்.

மேலும் விசா வேண்டி ரஜினியிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

அமெரிக்கா-சீனா வர்த்தக போா் முடிவு

Tags
Show More

Related Articles

Back to top button
Close