Breaking News
ராகவா லாரன்ஸின்

ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்ற ஸ்ரீரெட்டி!

பாலியல் குற்றச்சாட்டுக்களை மறுத்து ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலை நடிகை ஸ்ரீரெட்டி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர், தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கினார்.

தெலுங்கு திரையுலகினரை கலங்கடித்துவிட்டு சிறிது இடைவேளிக்குப் பின், தமிழ் திரையுலகினரை டார்கெட் செய்த ஸ்ரீரெட்டி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றம்சாட்டி தமிழ் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், செய்தியாளர்கள் சந்திப்பில் நடித்து, நடனமாடி திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தருவதாகவும், உடனடியாக அதற்கான முன் பணத்தை தருவதாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

ராகவா லாரன்ஸ் விடுத்த இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என ஸ்ரீரெட்டி குறிப்பிட்டிருந்த வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸின் சவாலை ஸ்ரீரெட்டி ஏற்றுக் கொண்ட நிலையில், லாரன்ஸ் இயக்கும் அடுத்தப்படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …