Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / அனைத்தும் தமிழ் மயமாகும் காவல்துறை !! டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் பாராட்டு !
தமிழ்

அனைத்தும் தமிழ் மயமாகும் காவல்துறை !! டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் பாராட்டு !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் எனவும் போலீசார் வருகைப் பதிவேட்டில் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் எனவும் தமிழக டிஜிபி ஜெ.கே திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில், “காவல் துறை” என இடம்பெற்றிருக்க வேண்டும். காவல்துறையில் கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்” என திரிபாதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் துறை

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிஜிபி திரிபாதியின் இந்த உத்தரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிடுகையில்,

“தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களுக்கு வாழ்த்துகள். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக!” என தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

Check Also

அன்புமணி

இலங்கையையும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!9Shares இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று, பாமக இளைஞரணி தலைவரும் …