Friday , January 18 2019
Home / த‌மிழக‌ம் / ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்து, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தபின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது.

தொடர்ந்து அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால், சிறிது நாட்கள் அவர் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார்.

ஆகவே கழக தொண்டர்கள் யாரும் அவரை சந்தித்து இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Check Also

புதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்!

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …