Saturday , July 20 2019
Home / இலங்கை செய்திகள் / வடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக்
வடபகுதிக்கு

வடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி-மெல்ல கசியும் உண்மைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய ஸ்ரோக்-ஒன்-ரென்ட்-மக்களால் வழங்கப்பட்ட பணம் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அண்மையில் வட மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையில் அம் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தவர்களாக தம்மை அடையாளப்படுத்திய பிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தினர் அப்பகுதி தமிழ் மக்களிடம் சுமார் £3800 பவுண்ஸ்க்கு மேல் சேற்கப்பட்டு,மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

சேர்க்கப்பட்ட £3800 பவுண்ஸ்ல், சுமார் £900 பவுண்ஸ் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வைத்ததோடு.

அப்பணம் இலங்கை ரூபாயாக இரண்டு லட்சம் 200000 மட்டுமே.ஸ்ரோக் ஒன் ரென்ட் தமிழர் நலன் புரி சங்கத்தால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திடம் வழங்கப்பட்டது.

அப்பணத்தில் அவர்கள்.கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் 100000 ரூபாக்கு 115 பிள்ளைகளுக்கு கற்பித்தல் உபகரணங்களும்,மிகுதி ஒரு லட்சம் ரூபாய்க்கு 100000 உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதாக ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் எமது வெள்ள இடர்பாடுகளைக்கண்டு.கொட்டும் பனி குளிரிலும் மிகுந்த கஸ்ரத்துக்கு மத்தியில் வேலை செய்து எமக்கு அனுப்புவதற்கு தமிழர் நலன் புரிச்சங்கத்திடம் வழங்கப்பட்ட பணமே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது

குறித்த விடையம் தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர் குழுவொன்று கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரை வினவியபோது அவர்கள் கூறிய விடையத்தினை இங்கே தருகின்றோம்

பிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தால் தங்களுக்கு வழங்கும் படி கூறி பணத்தினை எம்மிடம் கையளித்தனர்

எங்களிடம் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாவும் 100000,இரண்டாம் கட்டம் ஒரு லட்சம் ரூபாவும் 100000 எமக்கு தந்துள்ளார்

இவ்வாறான சூழ்நிலையில் இவ் மோசடியை ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள தவறுவார்களா?

அல்லது திருடிய பணத்தை மூடி மறைக்க என்ன வேடம் போடப்போறார்கள்? இவர்கள் தங்கள் சங்கம் நிருவியதிலிருந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியா என்ன உதிவித்திட்டங்களை முன்னெடுத்தார்கள்

இவர்கள் தங்கள் இருப்பில் உள்ள பணத்தை பாதுகாத்துக்கொண்டு.

வெள்ள நிவாரணத்துக்கு மக்கள் கொடுத்த பணத்தை திருட்டு செய்யாதவர்களாக இருந்தால் எவ்வாறு viber குறுப்பில் பணம் சேற்பதற்கு கோரினார்களோ அதே viber குறுப்பில் சேற்கப்பட்ட முழு பணத்தொகையும் பதிவு செய்து,

இங்கு அனுப்பப்பட்ட பணத்தின் விபரத்தையும் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தால் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட கடிதத்தினையும் மக்களுக்கு காண்பிக்கவேண்டிய பொறுப்பில் உள்ளீர்கள்

என்பதை கவனத்தில் கொள்வதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான திருட்டு செயல்களில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்தி விட்டு.

உலகமே திரண்டு எம்மவருக்கு உதவி செய்யும்போது.தமிழர் நலன்புரி சங்கம் என்ற பெயரை வைத்துக்கொண்டு உங்களால் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சிந்திக்கும் தருவாயில் உள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டு தமிழ் மக்களுக்கு உண்மையாக செயற்பட முன்வாருங்கள்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Sharesஇலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் …