Breaking News

அமெரிக்காவிற்குள் நுழைய தடை

அமெரிக்காவிற்குள் நுழைய தடை

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 28 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

எனினும், இங்கிலாந்துக்கு இந்த தடை பொருந்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், கொவிட் -19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறியதால், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

வாஷிங்டன், பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் பொதுச் சுகாதார அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

உகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

மாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி

கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …