முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

இராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்!

- ஜனாதிபதி செயலகம் முன் கோஷம்

இராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்!

இராணுவத்திடம் சரணடைந்தவர்களையும் மரணமடைந்தவர்களாகக் கருதி எவ்வாறு அரசு மரணச் சான்றிதழ்களை வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பி சமவுரிமை இயக்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் எனின் அவர்களைக் கொன்றவர்கள் யார்?, மரணச் சான்றிதழ்களைக் கொடுத்து சகல காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் மறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்க்கின்றோம் போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சரணடைந்த

“கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி எனவும், வடக்குக்கும் தெற்குக்கும் தானே ஜனாதிபதி என்றும் தெரிவித்திருந்தார்.

முழு நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுடைய ஒருவர் காணாமல்போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற கருத்தை ஒருபோதும் கூறமாட்டார். ஆயினும், ஜனாதிபதி கோட்டாபய அவ்வாறான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அவ்வாறாயின் சிலர் இராணுவத்தினரிடத்தில் சரணடைந்தனர், சிலர் கைது செய்யப்பட்டனர். எனவே, அவர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்குது எந்தளவுக்குச் சாத்தியமாகும்?

முறையான விசாரணைகளின்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இது தொடர்பான விசாரணைகள் நடத்த வேண்டியது அவசியமானதாகும்” – என்று அருட்தந்தை சக்திவேல் மேலும் கூறினார்.

இந்திய சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம்

முதல் மந்திரியாக வரும் 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close