Breaking News
மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 8 ஆம் திகதி இடிக்கப்பட்டது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் அறிவித்தல் விடுத்திருந்தது.

இதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் கல்வி பொதுதரா தர உயர்தர மாணவர் ஒருவரும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திட்டமிட்டு யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …