Breaking News
அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம்

அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம்

அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம்

அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்ற (பாலோயர்கள்) அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட சூழலில், அவர் தனது அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசு கணக்கில் இருந்து டுவிட்டர் பதிவுகளை வெளியிட தொடங்கினார். அதில், சுதந்திர பேச்சுக்கு தடை விதிக்கும் வேலையில் டுவிட்டர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறது. இதனை நான் நீண்டகாலம் ஆக கூறி வருகிறேன்.

ஜனநாயக கட்சியினருடன் டுவிட்டர் பணியாளர்கள் ஒருங்கிணைந்த செயல்படுகின்றனர். அவர்கள் என்னை அமைதிப்படுத்த முயல்கின்றனர். டுவிட்டரில் என்னை பின்தொடரும் 7.5 கோடி பேரையும் அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

எனினும், ஒரு சில நிமிடங்களில் டிரம்பின் அதிகாரப்பூர்வ அரசு கணக்கான பாட்டஸ் (POTUS) கணக்கும் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டீம் டிரம்ப் என்ற பெயரில் டிரம்பின் குழுவினர் மற்றொரு டுவிட்டை வெளியிட்டனர்.

எங்களை அமைதிப்படுத்த முடியாது. சுதந்திர பேச்சுக்கு டுவிட்டர் ஏற்றதில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது.

Today rasi palan – 09.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 09, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …