இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

வடக்கில் தொடரும் தற்கொலைகள்! – உறவுகள் கதறல்

வடக்கு மாகாணத்தில் தற்கொலையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலைகொள்ள வைக்கின்றது.

தமது சொந்தங்கள் ஏன் தற்கொலை செய்கின்றார்கள் என்ற உரிய காரணம் பெரும்பாலான உறவுகளுக்குத் தெரியாமல் அவர்கள் கதறி அழுகின்றார்கள்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு வருகின்றது.

போரால் அதிகமான மக்களைப் பறிகொடுத்த இந்த மாவட்டங்களில் இப்படியான அவலச் சாவுகள் இதற்கு என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், அரச, தனியார் உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், திருமணமான இளம் பெண்கள், குடும்பஸ்தர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் தற்கொலை செய்து வருகின்றார்கள்.

காதல் பிரச்சினை, கடன் பிரச்சினை, சீதனக் கொடுமை, குடும்பப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட அவமானங்களினால் அவர்கள் தற்கொலை செய்கின்றார்கள் என்று முதல்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.

பிரச்சினைகளுக்குத் தற்கொலை மருந்தாகாது என்று சுட்டிக்காட்டியுள்ள உளவியலாளர்கள், அனைவரும் இணைந்து தற்கொலையைத் தடுப்போம் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றைய ராசிப்பலன் 13 சனவரி 2020 திங்கட்கிழமை – Today rasi palan 13.01.2020 Monday

Tags
Show More

Related Articles

Back to top button
Close