தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

எழுவர் விடுதலை தொடர்பாக வழக்கு – உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு !

ராஜீவ் கொலை வழக்கில் சம்மந்தபட்ட ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.

அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய ஏழுப் பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றது.

இதையடுத்து அவர்கள் ஏழு பேரும் 27 ஆண்டுகளை சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன.

இதையடுத்து ஏழுபேரின் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் அதில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து எழுவர் விடுதலைக்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பேரறிவாளின் தாயார் அற்புதம்மாளும் தனிப்பட்ட முறையில் ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

ஆனால் ஆளுநர் இந்த விஷயத்தில் மௌனம் காத்து வருகிறார்.

இதற்கிடையில் ராஜீவ் குண்டுவெடிப்பின் போது அவரோடு சேர்ந்து இறந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தார் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் எழுவர் விடுதலைக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

அந்த வழக்கை இப்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close