சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

வாடிவாசலில் இணையும் சூர்யா – வெற்றிமாறன்!

சூர்யாவுடன் இணையும் படம்! டைட்டிலை வெளியிட்ட வெற்றிமாறன்!

சூர்யாவை நாயகனாக வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தின் டைட்டிலை வெற்றிமாறன் வெளியிட்டார்.

காப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்புடைய டைட்டில் என்பதாலும் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் ரசிகர்களிடம் இந்தப் படம் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதி 1959-ம் ஆண்டு வெளியானது. ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அசுரனாக படமாக்கிய வெற்றிமாறன் அதில் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியை நேரில் சந்தித்தார் விக்கி! – வடக்குக்கு வருமாறும் அழைப்பு

வடக்கில் தொடரும் தற்கொலைகள்! – உறவுகள் கதறல்

Tags
Show More

Related Articles

Back to top button
Close