System Change ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளது – சஜித்

System Change என்ற முறைமை மாற்றம் ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.

ஆட்சிக்கு வந்த பிறகு வரியைக் குறைப்பதாகக் கூறியபோதிலும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், அந்தப் பேச்சுக்களின் பின்னர், உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்திடம் அடிபணிந்துள்ளார்.

அவரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆட தொடங்கியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஊடகங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினாலும், இதுவரை குறித்த முறைமை மாற்றம் நிகழவில்லை.

அவரது கட்சி, சின்னம், அணி மற்றும் அவர்களது சமூக வலைத்தள குழுமங்களிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை இருந்து வந்த பழைய முறைமையே தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Check Also

சுன்னாகத்தில்

சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள்

சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள் மயிலிட்டியில் இருந்து சுன்னாகம் வந்து கொண்டு …