இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

காணாமல்போனோரின் உறவுகளை விசாரணைக்கு அழைக்கிறது ரி.ஐ.டி.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 1055 நாட்களாகத் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே கா.ஜெய வனிதா இந்த விடயம் தொடர்பாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இரண்டாம் மாடி விசாரணைப் பிரிவுக்கு இம்மாதம் 13ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்கு வருமாறு எனக்கும் எனது கணவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மூன்றாவது தடவை என்னை விசாரணைக்காக அழைத்திருக்கின்றார்கள். முதல் இரு தடவையும் என்னைத் தனியாகக் அழைத்திருந்தார்கள்.

இப்போது எனது கணவனையும் வருமாறு அழைத்திருக்கின்றார்கள். இதனை நான் ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தியே செல்ல விரும்புகின்றேன்.

சர்வதேசத்தின் கவனத்துக்கு இந்தப் போராட்டம் எடுக்கப்பட்டுவரும் நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். கடந்த வருடமும் இவ்வாறே நடந்தது” – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close