Breaking News

ரி.ஐ.டி. விசாரணைக்குச் சென்றவர் மாயம்!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்காகக் கொழும்பு சென்ற கணவனைக் காணவில்லை என்று அவரது மனைவியால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொண்டைமனாறு, கெருடாவில் தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பரமு விஜயகுமார் (வயது – 38) என்பவரே காணாமல்போயுள்ளார் என்று நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எனது கணவனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதற்காக அவர் கொழும்பு சென்றிருந்தார். அன்றைய தினத்தில் இருந்து அவருடனான தொடர்பு கிடைக்கவில்லை” என்று காணாமல்போனவருடைய மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த நபர் விசாரணைக்கு அன்றைய தினம் சமுகமளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிடப்பட்டுள்ளது.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …