Sunday , July 22 2018
Breaking News
Home / Headlines News / தந்திரமாகத் தப்பிக்கும்- போதைப் பொருள் வியாபாரிகள்

தந்திரமாகத் தப்பிக்கும்- போதைப் பொருள் வியாபாரிகள்

போதைப் பொருள் வியா­பா­ரி­களை நாம் கைது செய்ய முற்­ப­டும்­போது அவர்­கள் தந்­தி­ர­மா­கத் தப்­பித்­து­வி­டு­கி­றார்­கள். அவர்­கள் எங்­க­ளை­ வி­டப் புத்­தி­சா­லி­க­ளாக இருக்­கின்­ற­னர்.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட பொலிஸ் அத்­தி­ யட்­ச­க­ரின் பிர­தி­நி­தி­யா­கக் கலந்­து­கொண்ட பொலிஸ் பரி­சோ­த­கர் கமஹே தெரி­வித்­தார்.

வடக்கு -கிழக்கு சமூக நல்­லி­ணக்க அமைப்­பின் ‘போதை ஒழிப்­போம் வன்­முறை தவிர்ப்­போம்’ எனும் கலந்­து­ரை­யா­டல் யாழ்ப்­பா­ணம் நாவ­லர் கலா­சார மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெ­றும் வன்­மு­றைச் செயற்­பா­டு­கள் மற்­றும் போதைப்­பொ­ருள் பாவ­னை­யின் தாக்­கம் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

மாவட்ட ரீதி­யில் செயற்­ப­டும் பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள், சமூ­கத் தலை­வர்­கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் பிர­தி­நி­தி­கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் மத­கு­ரு­மார்­கள், பொலிஸ் உய­ர­தி­கா­ரி­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

பிர­தேச மட்­டங்­க­ளில் இடம்­பெ­றும் வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு செய­லணி அமைத்து பிர­தேச ரீதி­யாக விழிப்­புக் குழுக்­களை­ நிறு­வு­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அஸ்­மின் இந்த நிகழ்­வில் தெரி­வித்­த­தா­வது, தோல்வி அடைந்த அரச தலை­வர்­க­ளின் வரி­சை­யில் மைத்­தி­ரி­பால வந்­து­விட்­டார். போதை­யற்ற நாட்டை உரு­வாக்­கு­வேன் என்று தெரி­வித்­த­வர், யாழ்ப்­பா­ணத்­தில் இன்று தொடர்­கின்ற போதைப் பொருள்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் இருக்­கின்­றார்.

போதைப் பொருள் பாவனை – விற்­பனை இடம்­பெற்­றுக்­கொண்­டு­தான் இருக்­கின்­றது. யாழ்ப்­பாண நக­ரத்­தில் நடை­பா­தை­யில் போதைப் பாக்கு விற்­பனை செய்­த­மைக்­காக கைது செய்­யப்­பட்ட விற்­பனை முக­வர் தற்­ச­ம­யம் நட­மா­டும் விற்­பனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளார். முச்­சக்­கர வண்டி மற்­றும் உந்­து­ ரு­ளி­க­ளில் தமது வியா­பா­ரங்­களை ஆரம்­பித்­துள்­ளார். போதைப் பொருள் பாவனை இங்கு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை -– என்­றார்.

கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டோர், கட்­டுப்­பா­டில்­லாது தொட­ரும் வன்­மு­றை­கள் தொடர்­பில் பல­ கேள்­வி­க­ளைப் பொலி­ஸா­ரி­டம் எழுப்­பி­னர். உரிய பதி­லைப் பொலி­ஸார் வழங்­க­வில்லை.
சட்­டத்­தில் பல­வீ­னம், பொலி­ஸா­ருக்கு ஆள­ணி­போ­தாது, வாகன வச­தி­கள் இல்லை என்று மக்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பொலி­ஸார் பதி­ல­ளித்­த­னர்.

மேலும் மாவா­ பாக்­கில் போதைத் தன்மை குறைவு என்று இர­சா­யன அறிக்­கை­கள் தெரி­விப்­ப­தா­கக் குறிப்­பிட்ட பொலிஸ் பரி­சோ­த­கர் கமஹே, இத­னால் மாவாப் பாக்கு வியா­பா­ரி­கள் கைதா­வ­தி­லி­ருந்து தப்­பித்து விடு­கின்­ற­னர் –என்­றார்.

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …