Friday , January 18 2019
Home / Tag Archives: அதிமுக

Tag Archives: அதிமுக

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் உதயநிதி?

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னாள் முதல்வரும், அரசியல் ஆளுமையான கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் அந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இருப்பை தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் நிரூபிக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறது. …

Read More »

இவருக்கு பதவிப் பறிப்பு – இன்று கரூரில் தி.மு.க. மாநாடு

இவருக்கு

கடந்த 14 ஆம் தேதி திமுக வில் இணைந்த செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்கும் மாநாடு இன்று கரூரில் நடக்கிறது. 18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே …

Read More »

திடீரென முளைத்த ஜெயலலிதாவின் சிலை

ஜெ சிலை

தஞ்சை ரயில்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் திடீரென முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதனால் அவரது கட்சியினர் அவரது 70 வது பிறந்தநாளான 2018 பிப்ரவரி 24 அன்று அவரது முழு உருவச்சிலையை திறந்தனர். திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதாவின் உருவத்தோடு பொருந்தவில்லை என கேலிக்கு உள்ளானதால் அந்த சிலை அப்புறப்படுத்தப்பட்டு, நவம்பர் …

Read More »

அனைத்து கட்சி கூட்டமா? திமுக தோழமை கட்சி கூட்டமா?

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி …

Read More »

ஆளும்கட்சி போல நமக்கும் ஒரு சேனல் வேணும்

ஆளும்கட்சியின் செய்தி சேனலாக நியூஸ் ஜெ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே திமுக வும் தங்கள் கட்சிக்கான சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனலை வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அதிமுக வில் ஏற்பட்ட குளறுபடிகளால் அதிமுக இரண்டானது. அப்போது ஜெயா டீவி சசிகலா & டிடிவி தினகரன் கைகளுக்கு சென்றது. அதனால் அதிமுக தங்கள் கட்சி சம்மந்தப்பட்ட …

Read More »

அதிமுகவிற்கு சவால்விட்ட ரஜினிகாந்த!! எதற்காக தெரியுமா?

சென்னை வெள்ளத்தின் போது அதிமுகவினர் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியது போல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கஜா புயல் நிவாரணப் பொருட்களில் ரஜினியின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். கடந்த 2015 டிசம்பர் பெரு வெள்ளத்தின் போது, சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அப்போது அதிமுகவினர் தமிழகமெங்கிலிருந்தும் வந்த நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அலப்பறை செய்தனர். இதற்கு அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. நீங்கள் …

Read More »

கஜா புயல்: தமிழக அரசை பாராட்டிய கமல்!

திருவாரூர் தொகுதியில்

கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

Read More »

கஜா எதிரொலி: அதிமுகவுடன் ஒன்று சேரும் திமுக

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளும் அதிமுக அரசோடு சேர்ந்து திமுகவினரும் ஒன்றுநேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு …

Read More »

ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. …

Read More »

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

சுயநினைவை இழந்த சசிகலா

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக …

Read More »