Friday , November 16 2018
Home / Tag Archives: இரா. சம்பந்தன்

Tag Archives: இரா. சம்பந்தன்

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்தென்ன

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். முதலாவதாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை …

Read More »

தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று …

Read More »

அரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்!

“நாடாளுமன்றத்தில் 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பை மதித்து – அதைப் பின்பற்றி இனியாவது செயற்படுங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று பகல் மஹிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றக் குழு …

Read More »

மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் …

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை 9.30 மணியிலிருந்து மதியம் வரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புத் …

Read More »

கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி: நடுநிலை வகியுங்கள்!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு இணங்கமாட்டோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தபோது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாவிட்டால் அதனை ஆதரிக்காமல் நடுநிலையாவது வகியுங்கள் எனவும் ஜனாதிபதி …

Read More »

ரணிலை பதவியிலிருந்து நீக்கியமை அரசமைப்புக்கு முரண்

“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதிவியிலிருந்து நீக்கியமை, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை, நாடாளுமன்றத்தைக் கூட்ட விடாமல் முடக்கி வைத்திருக்கின்றமை, பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்காகப் பல கோடி ரூபாவை அள்ளி வீசி எம்.பிக்களை விலைக்கு வாங்குகின்றமை என இலங்கையில் கடந்த வாரத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அரசமைப்புக்கு விரோதமானவை. இந்தக் கேவலமான நடவடிக்கைகளுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் …

Read More »

தீயசக்திகளை முறியடித்து நீதியை நிலைநாட்டுவோம்!

போஸ்ட் ஆபிசுக்கு

– தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன் “இந்தத் தீபத்திருநாளானது தீயசக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமையட்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “இலங்கைவாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தச் …

Read More »

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்! சம்பந்தன்

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது. இதன்போதே சம்பந்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய …

Read More »

கூட்டமைப்பு – ஜே.வி.பி. தலைவர்கள் முக்கிய சந்திப்பு

“நாட்டில் பிரதமர் நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை …

Read More »