Friday , January 18 2019
Home / Tag Archives: இரா. சம்பந்தன்

Tag Archives: இரா. சம்பந்தன்

தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்! – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்

“மலந்திருக்கும் தைத்திருநாள் தமிழ் மக்களின் இடர்கள் அனைத்தையும் நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைய வழிசமைக்கட்டும்.” – இவ்வாறு தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். “இலங்கைவாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான …

Read More »

போர்க்குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வா? – சம்பந்தன் சீற்றம்

“போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். அதனை விடுத்து அவருக்குப் பதவி உயர்வு வழங்குவது ஜனநாயகமாகாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். “சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவோம். அதேவேளை, நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவித்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக சர்வதேச சமூகத்தால் குற்றம் சுமத்தப்படும் 58ஆவது படைப் …

Read More »

பேரினவாதத்தைத் தூண்டாதீர்! – சம்பந்தன் பதிலடி

“புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தை தவறான வகையில் தூக்கிப் பிடித்து சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பு நிர்ணய சபை …

Read More »

சம்பந்தனை நேரில் சந்தித்தார் கிழக்கு ஆளுநர்!

“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீதியாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை முன்னெடுப்பேன்.” – இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்தார். கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார். இதன்போது, கிழக்கு மாகாண …

Read More »

பதவி ஆசை எனக்கில்லை! – சம்பந்தன் பதில்

பதவிக்கு ஆசைப்பட்டவன்

“நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே சபாநாயகரின் இந்தத் தீர்மானத்தை அவைக்கு அறிவித்திருந்தார் பிரதி சபாநாயகர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது மஹிந்த ராஜபக்ஷவா என்று நிலவிய …

Read More »

மக்களின் தேவையறிந்து திறம்படப் பணியாற்றுக!

“அதிகாரத்தின் பக்கம் மட்டும் நிற்க வேண்டாம். மக்களின் தேவையறிந்து அவர்களின் மனதை வெல்லும் வகையில் திறம்படப் பணியாற்றுங்கள். போரால் வடக்கு மாகாணமும் அங்குள்ள மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையைக் கவனத்தில்கொண்டு கடமையாற்றுங்கள்.” – இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனிடம் நேரில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள வடக்கு மாகாண ஆளுநர், நேற்றுக் …

Read More »

கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழுக் கூட்டம் இன்று காலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பையும் சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது. Share4TweetSharePin+14 …

Read More »

தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம்!

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும்.” – இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு நிறைவேறாது என்று மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை …

Read More »

ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு இல்லையேல் ஆதரியோம்!

“புதிய அரசமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும் தீர்வானது ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமையவேண்டும். அதேவேளை, மக்களும் பிராந்திய / மாகாண அரசுகளும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களைப் பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஓர் அதிகாரப்பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். “புதிய அரசமைப்பு கொண்டுவரப்படுகின்றபோது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு …

Read More »

பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் செயற்பட புதிய வருடத்தில் திடசங்கற்பம் பூணுவோம்!

“சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்தப் புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டானது இலங்கை வாழ் மக்களுக்கு செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய எனது வாழ்த்துக்கள். ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது …

Read More »