Saturday , December 15 2018
Home / Tag Archives: இலங்கை

Tag Archives: இலங்கை

மன்னார் மனித புதைகுழிக்கு ஐ.நா. பாதுகாப்பு தரவேண்டும்

மன்னார்

கடந்த 30 வருடங்களாக நிகழ்ந்த போர் மற்றும் போருக்குப் பின்னரான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் இன்று வரையில் அவர்களைப் பற்றி எது வித தகவலும் இல்லை என வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மனிதப் புதை குழிகளில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா. பொறுப்பேற்க கோரி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் …

Read More »

இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர்வாரா?

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார் இந்த நிலையில் இதுகுறித்து ரணில் தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் …

Read More »

மோசடி மூலம் ஆளவே முடியாது!

“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும் மோசடியும் ஆளும் உரிமையைத் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை …

Read More »

இலங்கை போரில் எத்தனை மக்களைக் கொன்றார்களோ

இலங்கையில் வடமேற்கு பகுதியான மன்னாரில் யாருக் செல்லமுடியாத ஒரு கல்லறை இடத்தில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஒரு காலத்தில் போர் மையமாக இருந்த இந்த இடத்தில் இதற்கு முன் இதே போல பல எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இப்போரில் ஏராளமானோர் பலியாகினர். …

Read More »

தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் …

Read More »

மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை இராஜதந்திர

இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன Share4TweetSharePin+14 Shares

Read More »

மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் …

Read More »

ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்

இன்றைய நாள் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இன்றைய நாள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு என நீண்ட கால ஜனநாயக பாரம்பரியம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் …

Read More »

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா

இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம் என …

Read More »