Monday , January 21 2019
Home / Tag Archives: எம்.ஏ.சுமந்திரன்

Tag Archives: எம்.ஏ.சுமந்திரன்

அரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மஹிந்த தலைமையிலான அணியினருக்குப் பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசமைப்பு உருவாகுவதை தயவு செய்து நீங்கள் தடுக்கவேண்டாம். மஹிந்த எங்களோடு சேர்ந்து வரவேண்டும்.” – இவ்வாறு பகிரங்கமாகக் கோரினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. நேற்றுப் பருத்தித்துறையில் தனக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஏற்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “பொங்கல் தின …

Read More »

வடமராட்சிக்கு பெருமை தேடித்தந்த சுமந்திரனுக்கு வரவேற்பு

‘தமிழினத்தின் காவலனே வருக வருக’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் நேற்று மாலை பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பெரும் அரசியல் குழப்பத்துக்கு உயர்நீதிமன்றத்தில் கம்பீரத்துடன் வாதாடி ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, தமிழ் மக்களுக்கும் தான் பிறந்த வடமராட்சி மண்ணுக்கும் பெருமை தேடிக் கொடுத்தமைக்காகவே இந்த விழா வடமராட்சி பொது அமைப்புக்களாலும் பொதுமக்களாலும் நடத்தப்பட்டது. …

Read More »

மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டம் ஒரு மாதத்துக்குள் வரும்!

“மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கம் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ளமையை அடுத்து ஒரு மாத காலத்துக்குள் இதற்குரிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பின்புல அழுத்தத்தோடு இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வரும் நடவடிக்கை அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான …

Read More »

புதிய அரசமைப்பு நிறைவேறும்! – சுமந்திரன் திட்டவட்டம்

“தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறும். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக வழி முறைகள் ஊடாகத் தீர்வும், தமிழ்த் தலைமையின் வகிபாகமும்’ என்னும் தலைப்பிலான அரசியல் கருத்தாடல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் …

Read More »

ஊடகவியலாளர்கள் கொலை: நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசும் கண்டுகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு பொரளை பொது மயானத்தில் இன்று காலை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட …

Read More »

புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம்!

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதிச் சந்தர்ப்பத்தை நாம் தக்க முறையில் – அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம். புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.” – இவ்வாறு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பிளவுபடாத நாட்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் தவறவிடக் கூடாது என்று தமிழ்த் …

Read More »

ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்!

“மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழர்களை நாம் ஒருபோதும் பழிவாங்க மாட்டோம். அந்தப் பழக்கம் எம்மிடம் இல்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் கூட்டாகத் தெரிவித்தனர். ‘நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா …

Read More »

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்!

“இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்து, அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரங்களை மாத்திரம் பிரியுங்கள். நாட்டைப் பிரிக்கவேண்டாம் என்று கேட்கின்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் நழுவவிடக்கூடாது என்று அவர்களிடத்தில் உரிமையுடன் கோரிக்கை முன்வைக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பம் எப்போதும் இருக்காது. அதற்காக வாய்ப்பு …

Read More »

தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கக் கூடாது சு.க.!

“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று …

Read More »

நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவு

“இலங்கையில் புதிய அரசமைப்பின் ஊடாக நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் அதற்குப் பெரும்பான்மையான புலம்பெயர் சமூகத்தினர் தமது ஆதரவை வழங்குவார்கள்.” – இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புக் குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேச்சு …

Read More »