Wednesday , October 17 2018
Home / Tag Archives: கருணாநிதி

Tag Archives: கருணாநிதி

கீழ்த்தரமான அரசியல்: கடம்பூர் ராஜூவுக்கு கனிமொழி பதிலடி

கீழ்த்தரமான

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் கூறியதற்கு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கருணாநிதி நினைவிடம் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கத்தை வெளியிட்டார். இந்த விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார். சென்னை …

Read More »

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் சென்னையில் அமைதிபேரணி நடத்திய மு.க.அழகிரி அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு மாவட்ட …

Read More »

சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம்

சிறந்த தலைவரான

சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் என்று கோபாலபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேட்டி அளித்துள்ளார். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த மாதம் 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து காலியாக உள்ள திமுக தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் …

Read More »

பேரணியில் மயங்கி விழுந்த ஆதரவாளர்கள்

பேரணியில் மயங்கி விழுந்த ஆதரவாளர்கள்

மு.க.அழகிரி நடத்திய அமைதி பேரணியில் கலந்து கொண்ட ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி நடத்தினார். திருவல்லிக்கேணியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பேரணியில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அழகிரி அறிவித்திருந்தார். ஆனால் பேரணியில் 10,000 பேர் கலந்துகொண்டது அழகிரிக்கு கடும் அதிர்ச்சியை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பேரணியில் …

Read More »

அமைதி பேரணிக்கு அரசியல் காரணமில்லை

அமைதி பேரணிக்கு அரசியல் காரணமில்லை

அமைதி பேரணிக்கு எந்த அரசியல் காரணமுமில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மெரினாவில் அமைந்திருக்கும் கலைஞர் நினைவிடம் நோக்கி இன்று அமைதி பேரணியை நடத்தினார். காலை 11 மணிக்கு தொடங்கிய அமைதி பேரணியில் 10,000 பேர் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணியில் தொடங்கிய இந்த பேரணி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு …

Read More »

சீமான் ஒரு பொய்காரன்: சுப.வீரபாண்டியன் கோபம்

சீமான்

கருணாநிதி குறித்து சீமான் கூறியது பொய் என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையடுத்து அவருடனான தனது பழக்கம் குறித்த தகவல்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த விழாவில் பேசிய அவர், கலைஞரின் சட்டைப் பையில் இருக்கும்பேனாவை எடுத்து எழுதிவிட்டு மீண்டும் கலைஞரின் சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு …

Read More »

இன்று கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்

இன்று கருணாநிதி

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் திமுகவினர் அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர்கள் பலர் வருகை தரவுள்ளதால் இன்று காலை முதலே சென்னை பரபரப்பாக உள்ளது. தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற …

Read More »

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

கருணாநிதியின் மனைவி

திமுக தலைவர் கருணாநிதி வயது முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் சோகத்தை இன்னும் திமுக தலைவர்களும் தொண்டர்களும் மறக்க முடியாமல் உள்ளனர் இந்த நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவர்களுக்கு சற்றுமுன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து இன்னும் அப்பல்லோ மருத்துவமனை …

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக-வில் படிப்படியாக தனது செயலால் “செயல் தலைவராக” உயர்ந்த ஸ்டாலின், திமுக-வின் தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். ஓய்வறியாத கருணாநிதி மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திமுக-வின் தலைவராக எத்தனையோ இடர்கள் வந்தபோதும், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும், கட்சியை சுமார் 50 ஆண்டுகாலம் கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவரது மறைவையடுத்து, …

Read More »

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள் யார் யார்?

கருணாநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 30ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட அனைத்து திமுக பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர்களும், பிற மாநில தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். யார் யார் இந்த நிகழ்ச்சியில் …

Read More »