Saturday , December 15 2018
Home / Tag Archives: கூட்டமைப்பு

Tag Archives: கூட்டமைப்பு

கூட்டமைப்பு – ஜே.வி.பி. தலைவர்கள் முக்கிய சந்திப்பு

“நாட்டில் பிரதமர் நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை …

Read More »

கூட்டமைப்பு – ஜே.வி.பி. இன்று அவசர சந்திப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது. பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி …

Read More »

நாடாளுமன்றில் மஹிந்தவை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு!

– நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் எனவும் தெரிவிப்பு அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது. நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் எனவும், அது மஹிந்த அரசு வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் …

Read More »

பரபரப்புக்கு மத்தியில் 7இல் கூடுகின்றது நாடாளுமன்றம்

அதிபர் சிறிசேன

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடவுள்ளது. முன்னதாக 5ஆம் திகதியே கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தீபாவளி விடுமுறை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே மேற்படி திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகிய எம்.பிக்களுடன் நாடாளுமன்றக் குழு அறையில் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய நடத்திய சந்திப்பின்போதே நாடாளுமன்றம் கூடவுள்ள திகதியை அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து …

Read More »

117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்

ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு! சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் …

Read More »

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்!

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. இணைந்து இடைக்கால அரசு!! – பேச்சுகள் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உத்தேசித்து வருகின்றனர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் …

Read More »

கொழும்பில் கோட்டையை தாரைவார்த்துவிட்டு வடக்கில் கள்ள மௌனம் சாதிக்கும் கூட்டமைப்பு!

வடதமிழீழம், யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது. பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து …

Read More »