Friday , September 21 2018
Home / Tag Archives: கேரளா

Tag Archives: கேரளா

கேரள கனமழை, வெள்ளம்: உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு-விவரம்

கேரள கனமழை

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உதவி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணைக்கு வரும் …

Read More »

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை: பினராயி விஜயன் அறிவிப்

திருநங்கைகள்

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் எனகேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சமூகத்தால் இன்று வரை ஒதுக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள். மற்றவர்களின் இழிசொல்லுக்கு தொடர்ந்து ஆளாகி வரும் அவர்கள் படும் இன்னல்கள் வார்த்தைகளால் கூற முடியாதவை. அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பதையே சிலர் மறந்துவிட்டு அவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்நிலையில், …

Read More »

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம்: கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என அணை கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறியுள்ளார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை. தற்போது கேரளாவில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய தலைமை கண்காணிப்புக்குழு தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு …

Read More »

பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த பாதிரியார்கள்.!

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், இவரது மனைவி எலிசபெத். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜான்சன், துபாயில் பணிபுரிந்து வருகிறார். எலிசபெத் மட்டும் குழந்தைகளோடு கேரளாவில் இருக்கிறார். எலிசபெத் தனது சிறுவயதில் தனது இல்லத்திற்கு அருகில் வசித்த பாதிரியார் ஒருவரால் பலமுறை …

Read More »

தனியாக நின்றிருந்த இளம் பெண் ! காவலாக நின்ற பஸ் ஓட்டுநர்

கேரளா மாநில போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் இளம்பெண்ணுக்கு செய்த உதவி அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. கேரளா மாநில போக்குவரத்து கழகத்தில் கோபகுமார் (Gopakumar ) ஓட்டுநராகவும், ஷாய்ஜூ (Shaiju) நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருவனந்தபுரம் – கோயம்புத்தூர் செல்லும் பேருந்தை இயக்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று இவர்களது பேருந்தில் அதிரா என்ற பெண் கொல்லம் செல்வதற்காக ஏறியுள்ளார். நள்ளிரவு ஒரு மணியளவில் அந்தப்பெண் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நின்றுள்ளது. …

Read More »

கலப்புத் திருமணம் செய்த வாலிபர் – கண்களை தோண்டி படுகொலை செய்த கொடூரம்

கேரளாவில் கலப்புத் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின்(23). இவர் அதே பகுதியை சேர்ந்தவ நினு (20) என்ற பெண்ணை காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தனர். பின் கெவின் …

Read More »

போலீஸ் ஸ்டேஷன் போகாமல் புகார் கொடுத்து எஃப்ஐஆர் காப்பி வாங்கலாம்…

பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கும் மற்ற காவல் காவல்துரை அலுவலகங்களுக்கும் நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்து அதற்கான எஃப்ஐஆர் காப்பியை பெரும் வசதி தற்போது கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. புகார் அளிப்பது மட்டுமின்றி மற்ற சேவைகளையும் ஆன்லைனில் பெறும் வகையில், புதிய சிட்டிசன் ஆப் கேரள முதல்வர் பினராயி விஜயனால் துவங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆன்லைனில் புகார் அளிக்க முடியும், மேலும், ஆன்மைன் …

Read More »