Monday , October 22 2018
Home / Tag Archives: கொழும்பு

Tag Archives: கொழும்பு

அனுராதபுர சிறைச்சாலை நோக்கி விடுதலைக்கான நடை

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை …

Read More »

அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து …

Read More »

இலங்கை விமான நிலையத்தில் வைத்து கடத்தல் சம்பவம்….!

இலங்கை

கிரான் கோரகல்லிமடு வாழைச்சேனையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய கோபாலகிருஷ்ண பிள்ளை “நந்தினி” (நந்தா) என்பவரே கடந்த 13/9/2018 அன்று காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போய் உள்ளர். கத்தார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 13/9/2018 அன்று நாடு திரும்பியுள்ளார். இவர் இவ்வாறு ஊருக்கு வரும் செய்தியை தொலைபேசி மூலம் 2 தினங்களுக்கு முன் தன் கணவருக்கு அறிவித்து …

Read More »

படகில் அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர் கைது

படகில் அவுஸ்ரேலியா

மாலைதீவில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்விரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரை சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்து கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு இன்று செவ்வாய்க்கிழமை பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை உயர்அதிகரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை நேற்று திங்கட்கிழமை அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது …

Read More »

கொழும்பிலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து

கொழும்பிலிருந்து

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் லண்டனிலிருந்து சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக லண்டனிலிருந்து சென்ற பெண் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. லண்டலிருந்து தாயகம் வந்த 47 வயதான சுதாகரன் பிரசாந்தினி மற்றும் அவரின் உறவினரான 42 வயதான லூயிஸ் அன்ரனிஸ் …

Read More »

பெரும் பரபரப்புக்கு மத்தியில் வழங்கப்பட்ட மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள்!

போதைப்பொருள் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விபரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, 18 மரணதண்டனை கைதிகளின் விபரங்கள் நீதிஅமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.சீ. தனசிங்க உறுதிசெய்துள்ளார். மேலும், அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு அடுத்த வாரம் முதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு …

Read More »

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி , கொள்கலன் பாரவூர்தி மோதி கோர விபத்து

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, பிள்ளையாரடி எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கொள்கலன் பாரவூர்தியொன்றும் முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்றவுடன் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியோர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மட்டக்களப்பு போக்குவரத்துப் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More »