Saturday , December 15 2018
Home / Tag Archives: சபாநாயகர் கரு ஜயசூரிய

Tag Archives: சபாநாயகர் கரு ஜயசூரிய

மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டு : சபாநாயகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள் மற்றும் போர்த்தாங்கிகள் இன்றி செய்யப்பட்ட ஒரு சதியின் விளைவாகவே இன்று அரசியல் நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இது நீண்ட நாள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒரு விடயம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களுடன் …

Read More »

சபாநாயகர் கட்சித் தலைவர்களை இன்று மாலை சந்திக்கிறார்

இம்மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை இன்று 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன் என்று சபாநாயகரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி வாக்குறுதியளித்திருந்தார். இதனை மறுநாள் 2ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுடனான சந்திப்பில் சபாநாயகர் தெரிவித்திருந்தார். எனினும், இந்த வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி, எதிர்வரும் 14ஆம் திகதிதான் சபை கூடும் என்ற அறிவித்தலை கடந்த 4ஆம் திகதி இரவு விசேட …

Read More »

நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி அனுமதி!

நாடாளுமன்ற அமர்வை இம்மாதம் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவால் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை திடீரென விலக்கி அப்பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்மாதம் 16ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி …

Read More »

ரணிலுக்கே ஆதரவு என ரிஷாத் அணி பகிரங்க அறிவிப்பு!

ரணிலுக்கே

“ரணில் விக்கிரமசிங்கவேதான் அரசமைப்பின்படி நாட்டின் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றார். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அவரின் கைகளை நாங்கள் ஓரணியில் நின்று தொடர்ந்து பலப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் காட்டும் சந்தர்ப்பத்திலும் அவருக்கே நாங்கள் ஆதரவு வழங்குவோம். மஹிந்த அணியினர் பல கோடி ரூபாக்களைப் பேரம் பேசி எம்மை வளைத்தெடுக்கவே முடியாது. இது ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு அல்ல. எங்களை நம்பி வாக்களித்து எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த …

Read More »

117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்

ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு! சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் …

Read More »

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் !

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்குக் கடிதம்! – நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்தி 126 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுகின்றார். நாடாளுமன்றம் கூடுவது குறித்து அதில் தீவிர ஆலோசனை …

Read More »

அதியுயர் சபையை உடன் கூட்டுங்கள்!

சபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று மாலை அனுப்பியுள்ளார். “இலங்கை அரசமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை அங்கீகரித்து சட்டங்களுக்கு …

Read More »