பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்! க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கல்வித்துறையைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான பயிற்சிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கல்வித்துறைசார் பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவை …
Read More »