Wednesday , December 19 2018
Home / Tag Archives: ஜே.வி.பி.

Tag Archives: ஜே.வி.பி.

மோசடி மூலம் ஆளவே முடியாது!

“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும் மோசடியும் ஆளும் உரிமையைத் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை …

Read More »

வாக்கெடுப்பை நடத்திக் காட்டியது ரணில் அணி!!

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மஹிந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சபாநாயகரின் …

Read More »

சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை

அடிதடி, அடாவடி, குப்பைவாளித் தாக்குதல், தூசன வார்த்தைப் பிரயோகம் என சாக்கடை அரசியலுக்கே உரிய அனைத்து அம்சங்களும் அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் இன்று (15) அரங்கேறின. சபாபீடத்தை சுற்றிவளைத்து, சபாநாயகர்மீது தாக்குதல் நடத்துவதற்கு மஹிந்தவின் சகாக்கள் முற்பட்டவேளை, ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களும் சபாபீடத்தை நோக்கி படையெடுத்துவந்தனர். இதையடுத்து இருதரப்பினருக்குமிடையே கடும் மோதல்ஏற்பட்டு, நாடாளுமன்றம் போர்க்களமாக காட்சிதந்தது. உச்சகட்ட பாதுகாப்பு இராஜதந்திரிகள் வருகை பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று …

Read More »

இன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று …

Read More »

கூட்டமைப்பு – ஜே.வி.பி. தலைவர்கள் முக்கிய சந்திப்பு

“நாட்டில் பிரதமர் நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை …

Read More »

கூட்டமைப்பு – ஜே.வி.பி. இன்று அவசர சந்திப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது. பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி …

Read More »

இலங்கையில் இரத்தக்களறி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு

அரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் இரத்தக்களறியொன்று ஏறபடுவதைத் தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களறியை ஏற்படுத்தக் கூடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏ.எவ்.பிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி தடைகளை ஏற்படுத்தி …

Read More »

பரபரப்புக்கு மத்தியில் 7இல் கூடுகின்றது நாடாளுமன்றம்

அதிபர் சிறிசேன

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடவுள்ளது. முன்னதாக 5ஆம் திகதியே கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தீபாவளி விடுமுறை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே மேற்படி திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகிய எம்.பிக்களுடன் நாடாளுமன்றக் குழு அறையில் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய நடத்திய சந்திப்பின்போதே நாடாளுமன்றம் கூடவுள்ள திகதியை அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து …

Read More »

ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.!

“அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவேண்டும். தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும்” என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் ஆறு பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. …

Read More »

117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்

ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு! சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் …

Read More »