Wednesday , December 19 2018
Home / Tag Archives: தமிழக அரசு

Tag Archives: தமிழக அரசு

முதல்வரிடம் கஜா நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர்

அதிமுகவில் விரிசலா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக சார்பில் கஜா பொது நிவாரண நிதியாக ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடுத்தார். டெல்டா பகுதியை கடுமையாக தாக்கி சேதம் விளைவித்த கஜா புயலால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு கடும் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர். …

Read More »

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு என்னென்ன தேவை?

தமிழகத்தில் நேற்று முன் தினம் வீசிய கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைப்படும் நிவாரணங்கள் பற்றிய ஒரு பார்வை. தஞ்சை, நாகை, புதுக்கோட்டை , திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கஜாப் புயல் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள், வீடு , பயிர்கள் மற்றும் கால்நடைகளை இழந்து தவித்து வருகின்றனர். மின்சாரம் முழுவதுமாக அந்தப் பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர். அரசு மற்றும் …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »

ஆளுநர் மீது நம்பிக்கை உள்ளது: பேரறிவாளன் தாயார்

ஆளுநர் மீது

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவருடனான சந்திப்புக்கு பின்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறியே நிலவி வருகிறது. இதனிடையே, …

Read More »

மணல் கடத்த உதவும் அதிகாரிகள் மீது குண்டாஸ்

மணல் கடத்த உதவும்

தமிழகத்தில் மணல் கொள்ளை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு தீர்வு ஏற்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் மணல் கடத்தல்காரர்களுக்கு அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ‘மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை …

Read More »

கவர்னர் 7 பேரை விடுதலை செய்ய மட்டார் – அடித்துச் சொல்லும் சுப்ரமணியன் சுவாமி

புலிகளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை …

Read More »

7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை

7 பேரின் விடுதலை தமிழக அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு …

Read More »

தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்-தம்பிதுரை

தமிழக அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது. …

Read More »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது உறுதி

விடுதலை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர்களை விடுதலை …

Read More »

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு தமிழக …

Read More »