Saturday , December 15 2018
Home / Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்

பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும்!! விமல்வீரவன்ஸ

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளத்தொடர்பு அம்பலமாகிவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். ” பிரதான எதிர்க்கட்சிப் பதவியை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலங்களில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிபோலவே செயற்பட்டது. ஆனால், இதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மூலம் ஐ.தே.கவுக்கும், கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளஉறவு அம்பலமாகியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் …

Read More »

வாக்கெடுப்பை நடத்திக் காட்டியது ரணில் அணி!!

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மஹிந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சபாநாயகரின் …

Read More »

ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு..

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது. குறித்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். Share3TweetSharePin+13 Shares

Read More »

சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை

அடிதடி, அடாவடி, குப்பைவாளித் தாக்குதல், தூசன வார்த்தைப் பிரயோகம் என சாக்கடை அரசியலுக்கே உரிய அனைத்து அம்சங்களும் அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் இன்று (15) அரங்கேறின. சபாபீடத்தை சுற்றிவளைத்து, சபாநாயகர்மீது தாக்குதல் நடத்துவதற்கு மஹிந்தவின் சகாக்கள் முற்பட்டவேளை, ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களும் சபாபீடத்தை நோக்கி படையெடுத்துவந்தனர். இதையடுத்து இருதரப்பினருக்குமிடையே கடும் மோதல்ஏற்பட்டு, நாடாளுமன்றம் போர்க்களமாக காட்சிதந்தது. உச்சகட்ட பாதுகாப்பு இராஜதந்திரிகள் வருகை பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று …

Read More »

இன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று …

Read More »

உயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால், கால அவகாசம் கோரப்பட்டதையடுத்தே குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் …

Read More »

பரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்

கொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் காணப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்பட்டுள்ளன. இந்நிலையில், மனுதாரர்களுக்கு அறிவிப்பு …

Read More »

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா?

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா? உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான உயர்நீதிமன்ற அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை …

Read More »

சட்டவிரோத நாடாளுமன்றக் கலைப்பு : சுமந்திரன்

“நாடாளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் போவோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை. இதைத் தவறாக அர்த்தப்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பதை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ளா!.” – இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். அவர் மேலும் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைத் தாண்டுவதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க …

Read More »

சிவசக்தி போன்று சோரம் போபவன் நான் அல்லன்

“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைப் போன்றோ அவரது கட்சியைப் போன்றோ பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போபவன் நான் அல்லன்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். மஹிந்த அணிக்குத் தான் தாவி அமைச்சுப் பதவியையும் பணத்தையும் பெறவுள்ளார் என சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் சரவணபவன் எம்.பி. விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

Read More »