Breaking News
Home / Tag Archives: தேசியச் செய்திகள்

Tag Archives: தேசியச் செய்திகள்

மகாராஷ்டிராவில் நில அதிர்வு.. மக்கள் பீதி

கிரீஸ்

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி, சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவானது. எனினும் சில வினாடிகளே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்கார் பகுதியில் எந்த வித …

Read More »

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு..

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், குமாரசாமி அரசின் பெரும்பான்மை குறைந்துள்ளது என எதிர்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூடிய சட்டசபையில் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் எம்.எல்.ஏக்களுக்கும், பாஜக உறுப்பினர்களுக்கும் நடந்த …

Read More »

மீண்டும் அதிர்ந்த அருணாச்சலப் பிரதேசம்: பொதுமக்கள் பீதி

மீண்டும் அதிர்ந்த அருணாச்சலப் பிரதேசம்: பொதுமக்கள் பீதி

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலையும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று மதியம் அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலையும் 4.24 மணிக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமங் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை என்பதால் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் சாலைகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் …

Read More »

சந்திராயன் 2 பறப்பதற்கு ரெடி…இஸ்ரோ தகவல்

சந்திராயன்

”சந்திராயன் 2” விண்கலம் விண்ணில் பறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 1 என்ற விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பியது. அந்த ஆய்வின் மூலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்தன. அதன்பிறகு நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 15 ஆம் தேதி “சந்திராயன் 2” என்ற விண்கலத்தை “ஜி.எஸ்.எல்.வி. …

Read More »

சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்கியது!!!

சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்கியது!!!

சந்திராயன்-2 விண்கலம் புறப்படுவதற்கான 20 மணி நேர ’கவுண்டவுன்’, இன்று அதிகாலை தொடங்கியது. நிலவில் ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 2008 ஆம் ஆண்டு, சந்திராயன் -1 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. அந்த ஆய்வுகளின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதை தொடர்ந்து தற்போது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செயவதற்காக, சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. சந்திராயன் …

Read More »

ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்

ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் நபருக்கு, பெண்பால் இனவிருத்திக்கான கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத்தன்மையுடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நபரின், அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புகள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. இந்த அரிதான நோயின் …

Read More »

இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.

திருமணத்திற்கு முன்பு, மணமக்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக பல வழிமுறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் கையாண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது, கோவா மாநிலத்தில் திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள், எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை கட்டாயமாக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை, …

Read More »

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை: சிவசேனா

ஒரே நாடு

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லாத ஒன்று எனவும், இது போன்ற விஷயங்களை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 19 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆனால் அந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவில் இருந்து பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் …

Read More »

தனது முடிவில் சற்றும் மனம் தளராத ராகுல் காந்தி: மூத்த தலைவர்கள் சோகம்

மக்களவைத் தேர்தல் எதிரொலி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் பெரும் தோல்வியை தழுவியது. மேலும் காங்கிரஸிற்கு எப்பவும் கைகுடுக்க கூடிய அமேதி தொகுதியும் இந்த தேர்தலில் கைவிட்டு போனது. இந்நிலையில் ராகுல் காந்தி, தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் …

Read More »

காங்கிரஸின் சீனியர் தலைவர்கள் எதிர்ப்பு

காங்கிரஸின்

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வி அடைந்து. தேர்தலுக்கு முன்பு பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிழக்கு உத்திர பிரதேசத்தின் காங்கிரஸ் பொது செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இந்திரா காந்தி போல் உருவ அமைப்பு இருப்பதால் உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் அதிகமான வாக்குகள் …

Read More »