Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: பலி

Tag Archives: பலி

இந்தோனேஷியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேஷியா

இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை லம்பாக் என்ற தீவின் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் …

Read More »

ராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் அவரின் 5 மாத குழந்தை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த சண்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், ராஜாஸ்தானை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்ற ராணுவ வீரர் பலியானார். அவரின் இறுதி …

Read More »

சேலம் கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்பு

சேலத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் தெரு முழுவதும் ஆறு போல தண்ணீர் ஓடியது. இந்நிலையில், சேலம் நாராயணநகர் பகுதியில் 4 மாணவர்கள் சினிமா பார்த்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையை கடந்த போது முகமது ஆசாத் என்ற மாணவன் …

Read More »

மது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

சிவகாசியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்த 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தனர். குடித்துமுடித்து விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் …

Read More »

மகன் கண் முன்னே துடிதுடித்து இறந்த பெற்றோர் – கதறித் துடித்த மகன்!

சாலை விபத்தில் தன் மண் முன்னே பெற்றோர் துடிதுடித்து இறந்ததைப் பார்த்து மகன் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் வின்செண்ட். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ரிச்சர்டு என்ற மகன் உள்ளார். ரிச்சர்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ரிச்சர்டும், அவரது பெற்றோரும் …

Read More »

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 9 பேர் பலி

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட வன்முறை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‘போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க …

Read More »

படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 40 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. 40 பயணிகளுடன் அந்த படகு தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி …

Read More »

செல்பி மோகம் – உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்

பாகிஸ்தானில் பாலம் மீது செல்பி எடுத்த போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் …

Read More »