Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: மழை

Tag Archives: மழை

சென்னையை புரட்டியெடுக்கும் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையை

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்யும் கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வருகிறது. கடந்த மாதம் வரை தண்ணீருக்காக குடத்தை தூக்கி கொண்டு ஓடிக் கொண்டிருந்த மக்கள் மழையின் வரவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். …

Read More »

ஒரே நாளில் 12 அடி உயர்ந்த நீர்மட்டம் – தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

ஒரே

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்ததால் கரையோரப்பகுதியில் இருக்கும் ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124 அடி உயரம் கொண்ட கே.எஸ்.ஆர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. …

Read More »

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி !

செய்தி

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பெய்த மழையைத் தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. கடுமையான வெயிலால் மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் வேளையில் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் முழுவதுமாக வற்றும் நிலையில் உள்ளன. அதனால் மக்கள் மழையைப் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். …

Read More »

இவன் தொல்லை தாங்க முடியல… எச்.ராஜா

எச்.ராஜா

வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து மழை பெய்துள்ளது என எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டதையடுத்து டிவிட்டர்வாசிகள் அவரை வசைப்பாட துவங்கியுள்ளனர். தமிழகத்திற்கு மழை இல்லாமல் இருந்த போது குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு, தமிழக அரசின் அலட்சியத்தை கண்டித்து திமுக மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், அதிமுகவினர் சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. ஒருவழியாக தமிழகத்தில் மழை பெய்தது, குறிப்பாக சென்னை மழை பெய்தது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிமுகவினர் …

Read More »

மழைக்காலத்துக்கு முன் நீர்நிலைகளைத் தூர் வாரவேண்டும்

ரஜினி மக்கள்

மும்பையில் தர்பார் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள ரஜினிகாந்த் நீர்நிலைகளை அரசு உடனடியாக தூர் வாரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மும்பையில் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘குடிநீர் பிரச்சனைகளுக்காக எனது ரசிகர்கள் இறங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனைப் பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். இப்போதுதான் அது வெளியில் தெரிகிறது. ஏரிகள், குளங்கள் எல்லாவற்றையும் …

Read More »

தமிழகம், கேரளா, கர்நாடகத்திற்கு மழை!

கர்நாடகத்திற்கு மழை

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயலால் தமிழகம், கேரளா. கர்நாடக உள்மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மும்பைக்கு தென்மேற்கில் 680 கிமி தொலைவில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத்தின் போரபந்தர் அருகே 135 கிமி வேகத்தில் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் …

Read More »

நாளை மறுநாள் கனமழை – வடமாவட்டங்களுக்கு நற்செய்தி !

நாளை மறுநாள்

நாளை மறுநாள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு கிரீடம் வைத்தாற்போல அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. அதிகப்படியான வெப்பம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச் சலன மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சிலப் பகுதிகளில் வரும் மே 14 ஆம் …

Read More »

சென்னைக்கு மழை வருமா? கணிப்புதான் என்ன??

கணிப்புதான் என்ன

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில், சென்னையிலும் விரைவில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாள் கழித்து கோடையில் மக்களின் தாகத்தை போக்கும் விதமாகவும் நிலத்தின் வறட்சியைப் போக்கும் விதமாகவும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, கொடைக்கானல், மதுரை ஆகிய பகுதிகளில் பலத்த காறுடன் கூடிய மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் காற்றுடன் …

Read More »

சென்னையில் கருக்கல் கட்டிய மேகம் ! மக்களின் தாகம் தீருமா ?

மேகம்

சமீபத்தில் ஃபானி புயல் வங்கக்கடலில் மையம் கொண்டது. அப்போது தமிழகக் கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டது. முக்க்யமாக மழைவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது,. ஆனால் ஃபானி புயல் நம்மை ஏமாற்றிவிட்டு ஒடிஷாவின் மீது பாய்ந்தது. அங்கு கரையைக் கடந்த புயல் பல வீடுகள், கட்டிடங்கள், பஸ், கிரேன் போன்றவற்றை சூறையாடியது. இந்நிலையில் இன்று பிற்பகலில் மேகங்கள் சூரியனை மறைத்து கருப்புமேகமாகவே நர்த்தனமாடி வருகிறது. இந்தக் கோடையில் ஆளையே சுடும் வெய்யிலில் குடிக்கத் …

Read More »

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதனையடுத்து ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 …

Read More »