Tuesday , February 19 2019
Breaking News
Home / Tag Archives: முல்லைத்தீவு

Tag Archives: முல்லைத்தீவு

மைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தின் டிபெண்டர் பனை மரத்துடன் மோதியது! இருவர் பலி; நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி – …

Read More »

வன்னி மக்களை மீட்போம்! – ரணில் வாக்குறுதி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு விரைந்து எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபா நிதி இழப்பீடாக உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் …

Read More »

அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

அனர்த்தம்

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுஅந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு …

Read More »

வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த இடரால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 842 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 905 பேர் 26 இடைத்தங்கல் முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 50 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சில் தலா …

Read More »

சீரற்ற காலநிலை 6 மாவட்டங்களில் 74,000 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பாட்டுள்ளனர். 2 ஆயிரத்து 803 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 517 பேர் 30 இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளடங்கலான பிரதேச செயலகப் …

Read More »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா

வெள்ளத்தினால்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது இது தொடர்பில் நேற்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தின் போது அமைச்சின் மேதில செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் அனைவரும் அனர்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுகு காப்புறுதி …

Read More »

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாகியது வடக்கு

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பியுள்ளன. இதையடுத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும் …

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை:மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்படுகின்றது என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான …

Read More »

ஆறு வயது சிறுவனின் முதுகுத்தோலை உரித்த மாமா!

ஆறு

தனது மாமனாரினால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு- மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். படிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே, அனது மாமனார் வயரினால் தாக்கியுள்ளார். கிரிசுட்டகுளம், கனகராயன்குளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி கினுஜன் (06) என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் மாமனாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினாலேயே மாமனார் வயரினால் …

Read More »

படையினரின் கொடி வணக்க வழிபாடு

இலங்கை படையினரின் 69 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இலங்கை படைப்பிரிவில் உள்ள 38 வகையான பிரிவு படையினரின் கொணடிகள் இன்று 16.10.18 முள்ளியவளை தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுளன. முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படைப்பரிவின் 38 கொடிகள் படையினரின் பாண்வாத்திய அணியிசை வகுப்புடன் முள்ளியவளை முதன்மை வீதியில் இருந்து …

Read More »