Wednesday , November 14 2018
Home / Tag Archives: மைத்திரி

Tag Archives: மைத்திரி

மைத்திரியை விளாசித்தள்ளிய மங்கள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து மைத்திரி ஜனாதிபதி பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத்தான் பெற்றிருக்கின்றோம். மைத்திரி ஒரு பைத்தியக்காரன். மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள …

Read More »

மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …

Read More »

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைக்க மைத்திரி திட்டம்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …

Read More »

மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும்!

மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சந்திரிகா அம்மையாளர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ரணிலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அவர் களமிறங்கியிருந்தாலும் தற்போது பின்வாங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, “மைத்திரி – மஹிந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசானது விரைவில் கவிழும். அக்கூட்டணியால் முன்நோக்கி செல்லமுடியாது. ரணிலை நீக்கி விட்டு மஹிந்தவை …

Read More »

வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்குக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே …

Read More »

கூட்டமைப்பின் எம்.பி. மஹிந்தவிடம் சரண்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணியில் சங்கமித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ள அவருக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலத்தில் சற்றுமுன்னர் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் மைத்திரி …

Read More »

பரபரப்புக்கு மத்தியில் 7இல் கூடுகின்றது நாடாளுமன்றம்

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடவுள்ளது. முன்னதாக 5ஆம் திகதியே கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தீபாவளி விடுமுறை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே மேற்படி திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகிய எம்.பிக்களுடன் நாடாளுமன்றக் குழு அறையில் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய நடத்திய சந்திப்பின்போதே நாடாளுமன்றம் கூடவுள்ள திகதியை அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து …

Read More »

நாடாளுமன்றத்தைக் கூட்டவே கூடாது! கோட்டா சண்டித்தனம்

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “மைத்திரி – மஹிந்த அரசில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது. அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு …

Read More »

‘பிக்பொஸ்’ வீட்டின் சாவிக்கொத்து மஹிந்த வசம்!

சீசன் 2 ஐயாவது வெற்றிகரமாக நடத்துவாரா மைத்திரி? தொண்டா, டக்ளஸூக்கும் வீட்டுக்குள் இடம் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்து மஹிந்தவுக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையையும் அதிரடியாக மாற்றியமைத்து, ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடிக்குமேல் அடிகொடுத்துவருகிறார். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, அரசமைப்பின் பிரகாரம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், வெளிநாடுகளும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அது குறித்து கவனம் செலுத்தாது , மைத்திரி ‘எதிர்’ ஆட்டம் …

Read More »

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்!

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. இணைந்து இடைக்கால அரசு!! – பேச்சுகள் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உத்தேசித்து வருகின்றனர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com