Friday , January 18 2019
Home / Tag Archives: மைத்திரி

Tag Archives: மைத்திரி

தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம்!

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும்.” – இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு நிறைவேறாது என்று மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை …

Read More »

மன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் தாய்லாந்தின் வெஹேர விகாரைக்குக் குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தாய்லாந்திலுள்ள அனைத்து பெளத்த விகாரைகளுக்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். நாட்டில் அரசியல் குழப்பம் தணிந்த நிலையில், அவசரமாக ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தார். கடுமையான …

Read More »

நள்ளிரவுக்கு முன் மைத்திரி அதிரடி அரசியல் தீர்மானம்

மைத்திரி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மஹிந்த அணியினரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ – அவரது அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கான மனுக்களை ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்திருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷ …

Read More »

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி

சஜித்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

ரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை! மைத்திரி திட்டவட்டம்

“நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன். அவரை அழைத்துவர வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டேன்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தனிநபருடனான முரண்பாடு காரணமாக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. இது கொள்கை ரீதியான …

Read More »

மைத்திரியை விளாசித்தள்ளிய மங்கள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து மைத்திரி ஜனாதிபதி பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத்தான் பெற்றிருக்கின்றோம். மைத்திரி ஒரு பைத்தியக்காரன். மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள …

Read More »

மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …

Read More »

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைக்க மைத்திரி திட்டம்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …

Read More »

மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும்!

மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சந்திரிகா அம்மையாளர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ரணிலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அவர் களமிறங்கியிருந்தாலும் தற்போது பின்வாங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, “மைத்திரி – மஹிந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசானது விரைவில் கவிழும். அக்கூட்டணியால் முன்நோக்கி செல்லமுடியாது. ரணிலை நீக்கி விட்டு மஹிந்தவை …

Read More »

வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்குக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே …

Read More »