Wednesday , October 17 2018
Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!!!

தலைமறைவான

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து …

Read More »

ஈழத்தமிழர்களின் கவனத்தையீர்த்த யாழ்ப்பாணம்

ஈழத்தமிழர்களின்

யாழில் அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா ஈழத்தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஆம், அண்மையில் யாழ் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் குதிரை வண்டியிலும், பல்லக்கிலும் பூப்புனித நீராட்டு விழா நடந்த பெண் பிள்ளையை சுமந்து சென்று, மணவறையில் இருந்தி, தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுத்து அசத்தியுள்ளனர். இது மட்டுமின்றி, நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் செவ்விளநீர் பானமாக வழங்கப்பட்டது. இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் …

Read More »

கொழும்பிலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து

கொழும்பிலிருந்து

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் லண்டனிலிருந்து சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக லண்டனிலிருந்து சென்ற பெண் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. லண்டலிருந்து தாயகம் வந்த 47 வயதான சுதாகரன் பிரசாந்தினி மற்றும் அவரின் உறவினரான 42 வயதான லூயிஸ் அன்ரனிஸ் …

Read More »

கொழும்பில் கோட்டையை தாரைவார்த்துவிட்டு வடக்கில் கள்ள மௌனம் சாதிக்கும் கூட்டமைப்பு!

வடதமிழீழம், யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது. பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர்போராட்டம் இன்று 500ஆவது நாளை எட்டியுள்ளது. அதைமுன்னிட்டு அவர்கள் இன்று யாழ்ப்பாணம், நல்லூரில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுத்துள்ளனர். தமது போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ளது. எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. தமது போராட்டத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் நல்லூரின் முன்பாகப் போராட்டம் நடத்துகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு உரிய பதிலை வெளியிட வேண்டும் …

Read More »

வடக்கிற்கு எவ்வாறு போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன?

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் எவ்வாறு வன்முறைகள் தீவிரமடைவதற்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய் வேண்டியது அவசியம் என்றும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வவுனியா – கல்நாட்டியகுளம் கிராமத்தில் சுற்றுலா தளம் …

Read More »

யாழ் அரச அதிபர் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறார் ; கஜேந்திரன்

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிதிகளான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தைக் கேட்டு கைதட்டினார்கள், விசிலடித்தார்கள் என்பதற்காகப் பிரதேச செயலகங்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் விசாரணையொன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாங்க …

Read More »

விஜயகலாவின் அதிரடி முடிவால் வாயடைத்து போயுள்ள மகிந்த அணி!

சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விஜயகலா மகேஷ்வரன் விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடல்களை அடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய (05.07.2018) தினம் மாலை விஜயகலா மகேஷ்வரன் ஒப்படைத்திருக்கின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள போதைப் பொருள் பாவணை மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் …

Read More »

யாழில் மாணவனைக் காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்!

யாழ்ப்பாணம் – காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-15) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் …

Read More »