Friday , January 18 2019
Home / Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம்!

“புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரல் இடுபவர்கள் உத்தமர்கள் அல்லர். அவர்கள் இந்த நாட்டை நாசமாக்கியவர்கள். அவர்கள் கொலைகாரர்கள்; ஊழல்வாதிகள். குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து கடந்த காலங்களில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இப்படியானவர்களின் மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அடிபணியாது. புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றின் இலங்கைச் …

Read More »

புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியேதான்!

“ஒற்றையாட்சி தன்மையை உறுதிப்படுத்தும் தற்போதைய அரசமைப்பின் இரண்டாவது உறுப்புரையை பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஊடாக ஒற்றையாட்சியா? ஒருமித்த நாடா? என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இனியும் போலியான நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தக் கூடாது.” – இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசமைப்பின் …

Read More »

பிரதமர் ரணிலுக்கு ராகுல் வாழ்த்துச் செய்தி!

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். “ஜனநாயக ரீதியில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் மீண்டும் பிரதமராகப் பணிகளைத் தொடர வாய்ப்புக் கிட்டியமைக்காக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்மைக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அதனால் உருவான அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்ட சவால்கள் ஜனநாயகத்தை நேசிக்கும் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. எனினும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை …

Read More »

ரணிலுடன் ஒப்பந்தம் என்று வெளியான ஆவணம் பொய்

இரா. சம்பந்தன்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் ஒப்பந்தம் செய்துள்ளேன் எனக் கூறி வெளியாகியுள்ள ஆவணம் பொய்யானது. நான் ரணிலுடன் ஒப்பந்தம் எதிலுமே கைச்சாத்திடவில்லை.”  இவ்வாறு அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறி முற்றுமுழுதாகச் சிங்களத்தில் அமைந்த ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் …

Read More »

போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் அவசியம்

போர்க்குற்றங்கள்

இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படல் உள்ளிட்ட விடயங்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளாக முன்வைத்தது. கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடனும், 30ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுடனும் கூட்டமைப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்தச் சந்திப்புக்களில் போர்க்குற்ற விசாரணை பற்றி கூட்டமைப்பு எதையும் பேசவில்லை என்று செய்தி வெளியாகியிருந்தது. இது …

Read More »

புதிய அரசமைப்பு வரும்! தமிழருக்குத் தீர்வு உறுதி!!

ரணில் விக்கிரமசிங்க,

“புதிய அரசமைப்பை நாம் கொண்டு வந்தே தீருவோம். அதனூடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.” இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்று வாக்குறுதியளித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் ரணில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் …

Read More »

ரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை! மைத்திரி திட்டவட்டம்

“நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன். அவரை அழைத்துவர வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டேன்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தனிநபருடனான முரண்பாடு காரணமாக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. இது கொள்கை ரீதியான …

Read More »

தில் இருந்தால் 29ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வாருங்கள்!

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால்தான் அவர்களின் உறுப்பினர்கள், வாக்கெடுப்பு நடத்துவதை ஒவ்வொரு முறையும் குழப்பி வருகின்றார்கள். எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் எதிர்வரும் 29ஆம் …

Read More »

தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று …

Read More »

அரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்!

“நாடாளுமன்றத்தில் 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பை மதித்து – அதைப் பின்பற்றி இனியாவது செயற்படுங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று பகல் மஹிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றக் குழு …

Read More »